சோழவரம்: சோழவரம் அடுத்த, ஞாயிறு கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புஷ்பரதீஸ்வரர் கோவில் உள்ளது. சூரிய ஸ்தலமாக உள்ள இங்கு சூர்ய பகவானுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கோவிலின் முகப்பில், சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோவில் உள்ளது. சீதை மடியில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பாகும்.
மேலும் சூரியஸ்தலத்தில், சொர்ண கல்யாணராமர் கோவில் அமைந்திருப்பது சிறப்பாகும். லட்சுமி நாராயணன், அனுமன், அரசமர பிள்ளையார் ஆகிய சன்னிதிகளும் உள்ளன.
இங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், சுதர்சனர் ஹோமம் நடைபெறுகிறது. திருமண தடை நீங்கவும், குழந்தைபாக்கியம் வேண்டியும் இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
சொர்ண கல்யாணராமர் கோவிலில், நேற்று, காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை சுதர்சனர் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன.
Advertisement