ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத ராகுல் போன்றவர்களுக்கு, ஜனநாயகம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. நம் நாட்டு விவகாரத்தில் தலையிடும்படி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ராகுல் துாண்டி விடுவதை ஏற்க முடியாது.
- நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
காங்கிரஸ் இல்லவே இல்லை!
அடுத்த லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும். பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் இல்லை.
- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
காங்கிரசை ஒதுக்க முடியாது!
காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. பா.ஜ.,வை எதிர்ப்பதில் காங்கிரஸ் தான் முக்கிய பங்காற்றும். காங்கிரசை ஒதுக்கி விட்டு, பா.ஜ.,வை வீழ்த்த முடியாது.
- ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர், காங்கிரஸ்
Advertisement