குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில், 11.43 கோடி ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையானது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டின், 11வது ஏலத்தில், 11.15 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. அதில், '8.29 லட்சம் கிலோ இலை ரகம்; 2.86 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, ஏலத்துக்கு வந்தது. 9.87 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. சராசரி விலை, 115.74 ரூபாயாக இருந்தது.
இலை ரகத்தில் சில உயர் ரகங்களுக்கு, 123 ரூபாய் வரை விலை கிடைத்தது. 50 ஆயிரம் கிலோ வரத்து குறைந்தது. 11.43 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. வரத்தும், விற்பனையும் குறைந்தது; சராசரி விலையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்தவாரத்தை விட, 50 ஆயிரத்து 400 கிலோ விற்பனை சரிந்தது.