ஆர்.கே.பேட்டை: ஒன்றியத்தின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு அரை குறையாக முடிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், மேற்கு பகுதியில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது மகன்காளிகாபுரம் ஊராட்சி. சித்துார் மாவட்ட மலைப்பகுதியில் உள்ளதால், சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.
இங்கிருந்து உருவாகும் ஓடைகள், ஆறாக ஆர்.கே.பேட்டை நோக்கி பாய்ந்து வருகிறது.
இந்நிலையில், மகன்காளிகாபுரம் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள மலைச்சரிவில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டமைப்பு அரை குறையாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டு வரப்பட்ட கான்கிரீட் தொட்டிகள் ஒன்றிரண்டு மட்டுமே பூமியில் புதைக்கப்பட்டுள்ளன.
திட்டம் குறித்த தகவல் பலகையும் இடிந்து சிதறி கிடக்கிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.