கூடலுார்:கர்நாடகாவில் இருந்து கூடலுாருக்கு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில், எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார், மைசூரிலிந்து ஊட்டி செல்லும் கர்நாடகா அரசு பஸ்சை சோதனை செய்தனர்.
அதில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1,700 புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்து, கேரள மாநிலம் மலப்புரம் யுனுஸ்,34, ஆசித்,21, ஆகியயோரை பிடித்து, மேல் விசாரணைக்காக, மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.எஸ்.ஜ., விஜயன் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.