பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே மரம் விழுந்து கார் சேதமான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த வாரம் துடியலூர், தடாகம், கணுவாய், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில நாட்களாக பகல் வேளைகளில் வெப்ப காற்று வீசிய நிலையில், திடீரென பெய்த மழையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பேராசிரியர் காலனியில் கரையானால் அரித்த நிலையில் இருந்த மே ப்ளவர் மரம் வேரோடு திடீரென சாய்ந்து விழுந்தது. இதில், மரத்துக்கு அடியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் சேதமானது. ரோட்டில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால், உயிர் சேதம் இல்லை.
சம்பவ இடத்தில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பிற மரங்களின் தன்மை குறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தனர்.
Advertisement