மேட்டுப்பாளையம்:ஓடந்துறை ஊராட்சியில், 6 லட்சம் ரூபாய் செலவில், பயணிகள் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, ஓடந்துறை ஊராட்சியில், ஊமப்பாளையம் கிராமம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊமப்பாளையம் வழியாக, பாலப்பட்டி, வேடர்காலனி, எம்.ஜி.ஆர்., நகர், வச்சினம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
ஊமப்பாளையத்தில் போதிய நிழற்கூரை இல்லாததால், பயணிகள் வெயிலில் நின்று பஸ்களில் ஏறுகின்றனர். இது குறித்து நிழற்கூரை அமைக்க கோரி, ஊராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து ஊமப்பாளையத்தில் ஆறு லட்சம் ரூபாய் செலவில், பயணிகள் நிழல் கூடம், பூமி பூஜை நடைபெற்றது.
இதில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், காரமடை ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, ஓடந்துறை ஊராட்சி துணைத் தலைவர் ஜானகி, ஒன்றிய கவுன்சிலர் யசோதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.