பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இந்த இலவச சேவை பொதுமக்களுக்காக வழங்கப்படுகிறது.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதம் ஆவதால், பார்வை இழப்பு நிலைக்கு ஆளாவதை குறிக்கும். இதில், பழைய நிலைக்கு திரும்ப கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த நோயின் ஆரம்ப கட்டங்களில் இதற்கான அறிகுறிகள் மிகவும் அரிதாகவே காணப்படும். இதை தடுக்க தேர்ந்த கண் மருத்துவர்களிடம், முறையான கால இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கண் நோய் சிகிச்சை இயல் மருத்துவர்கள், பார்வை திறன் இயல் நிபுணர்கள், அழுத்தம், பார்வை சோதனைகள் மற்றும் பார்வை நரம்பின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் குளுக்கோமா நோயை கண்டறிவார்கள். இதை தகுந்த பரிசோதனை செய்து கண்டறியலாம் என்றார்.