மேட்டுப்பாளையம்:யூடியூபர் சேனல் செய்தியாளரை, தர குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த, மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து, அதை யூடியூபில் பதிவிட்ட வைகுண்ட வாசன் மீது, காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரமடையை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வைகுண்ட வாசன், 25. இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில், பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோவாக எடுத்து, யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால் இவர் இளைஞர் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இதை பார்க்கும் இளைஞர்கள், வாகனங்களை வேகமாக ஓட்டுவதால், விபத்து அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளரை, வைகுண்ட வாசன், தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை யூடியூபில் பார்த்த காரமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ், யூடியூபர் வைகுண்ட வாசன் மீது, வழக்கு பதிவு செய்துள்ளார்.