கோவை:எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியின், விளையாட்டு தின விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ - மாணவியருக்கு கபடி, வாலிபால், த்ரோபால், கூடைப்பந்து உள்ளிட்ட 22 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தாண்டுக்கான விளையாட்டு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, 22 புள்ளிகள் எடுத்த ஹரினிஷ் மாணவர் பிரிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், பெண்கள் பிரிவில், 19 புள்ளிகள் எடுத்து காவியா தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டி சென்றனர்.
இதேபோல், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, 109 புள்ளிகள் பெற்று 'விட்சர்' அணி கைப்பற்றியது. 105 புள்ளிகளுடன் 'வார்லாக்' அணி இரண்டாமிடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எஸ்.எஸ்.குளம் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர்முத்துராஜ்-, இயக்குனர் அருணாச்சலம், முதல்வர் சார்லஸ், உடற் கல்வித்துறை இயக்குனர் வெள்ளிமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.