கொடுங்கையூர்: ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கல்லுாரியில், அனைத்து கல்லுாரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருத்தங்கல் நாடார், அன்னை வயலட், வேலம்மாள், கன்னிகா பரமேஸ்வரி, ஜெ.எச்.ஏ., அகர்சன் உட்பட 25க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன.
சின்னத்திரை நடிகை யுவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முதல்வர் அருள்மொழி செல்வன், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.
மாணவர்களின் மெல்லிசை, ஆடை அலங்கார அணிவகுப்பு, மேற்கத்திய நடனம் என, 20க்கும் மேற்பட்ட போட்டியில் பங்கேற்றனர்.
மெல்லிசை கலைஞர்கள் ரொசாரியோ, ஜெர்ரி, நடிகர்கள் மகேஷ், மேத்யூ ராஜசேகர் நடுவர்களாக இருந்தனர்.
அனைத்து கல்லுாரி மாணவ - மாணவியரும், தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
ஜெ.எச்.ஏ., அகர்சன் கல்லுாரி, ஒட்டுமொத்த கோப்பையை வென்றது. கன்னிகா பரமேஸ்வரி கல்லுாரி இரண்டாம் இடம் பெற்றது.