பூந்தமல்லி: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், 24 மணி நேரமும், இக்கடைகளில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது.
இதனால், சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர், பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், பயத்துடன் அப்பகுதியை கடக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
இரு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில், தனியார் மற்றும் சி.பி.சி.எஸ்.சி., பள்ளியும், பனிமலர் பொறியியல் கல்லுாரியும் உள்ளது.
இக்கடைகளால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. தவிர, 'குடி'மகன்கள், போதையில் பெண்களை கிண்டல் செய்கின்றனர்; அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையிலே 'குடி'மகன்கள் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இது தவிர, இந்த மதுக்கடைகளுக்கு எதிரில், வரதராஜபுரம் ஊராட்சியில், குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் ஒரு மதுக்கடை அமைக்கப்பட்டு வருகிறது.
'டாஸ்மாக்' கடைகளால் ஏற்படும் பிரச்னை குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement