பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையன்பேட்டையில், ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதன் 29ம் ஆண்டு விழா, விமரிசையாக நடந்தது.
கல்லுாரியில் பயின்ற சிறந்த மாணவ - மாணவியர் கவுரவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் உதவி கமிஷனர் பாரதிராஜன் பேசுகையில், ''மாணவர்கள் கடின உழைப்பும் விடா முயற்சியும் மேற்கொண்டால், போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றியடைந்து, தங்கள் லட்சிய வாழ்க்கையை வாழ முடியும்,'' என்றார்.
முன்னதாக, கல்லுாரி துணை முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்க, முதல்வர் சாந்தி ஆண்டு அறிக்கை வாசித்தார்.
பல்கலை அளவிலான தேர்வில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவி நேத்ரா நன்றியுரை வழங்கினார்.