கோவை:ஜூனியர் கே.எஸ்.சி., மற்றும் கள்ளிமடை நண்பர்கள் இணைந்து நடத்திய, மாநில அளவிலான ஓபன் கபடி போட்டி, கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் திடலில் நேற்று நடந்தது.
போட்டியில் சென்னை, கோவை , ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 70 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும், நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.
முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றாம் பரிசு ரூ. 30 ஆயிரம் நான்காம் பரிசாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
வெற்றி பெறும் அணிகளுக்கு, கோப்பை மற்றும் காலிறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிகளுக்கு, ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நேற்று நடந்த நாக் அவுட் சுற்றுப்போட்டியில், கோவை 'பிளாக் டைமண்ட்ஸ்' அணி 22 - 18 என்ற புள்ளிக்கணக்கில் நாமக்கல் மாவட்ட அணியையும், 46 தடாகம் கபடி அணி, 25 - 21 என்ற புள்ளிக்கணக்கில், 'டூரிஸ்ட் பேர்டு' அணியையும் வீழ்த்தின.