மாதவரம்: சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கத்தில், தண்டபாணி, 50, என்பவர் லாரி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், அங்கு, 3 அடி நீளமுள்ள, கொழுத்த மண்ணுளி பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டார்.
இது குறித்து, மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், அதை பிடித்து, திருவள்ளூர் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மண்ணுளி பாம்பு அருகில் உள்ள மாந்தோப்பில் இருந்து வந்ததா அல்லது வெளிமாநில லாரியில் யாராவது கடத்தி வந்தனரா என, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.