கோவை:மாநில அளவிலான எம்.டி.பி., சைக்கிள் போட்டி, கோவைப்புதுார் பகுதியில் உள்ள எம்.டி.பி., டிராக்கில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான எம்.டி.பி., சைக்கிள் போட்டி, கோவைப்புதுார் பகுதியில் உள்ள 'வெஸ்டர்ன் வேலி எம்.டி.பி., டிராக்கில்' நடந்தது.
ஜூனியர், சப்-ஜூனியர், யூத், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார், 100 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவு
யூத் பாய்ஸ் பிரிவில், பிரனேஷ் முதலிடம், நந்தகிஷோர் இரண்டாமிடம், ரமணி மூன்றாமிடம்; சப் ஜூனியர் பிரிவில், ஆலன் ரோவன் முதலிடம், ரிதின் உதயபிரகாஷ் இரண்டாமிடம், சிவ சங்கர் மூன்றாமிடம்; ஜூனியர் பிரிவில், முகமது ஹிர்சித் முதலிடம், மவுனீஸ்வரன் இரண்டாமிடம், விக்னேஸ்வரன் மூன்றாமிடம்;எலைட் பிரிவில், ஜானிஸ் முதலிடம், அஷ்வின் குமார் இரண்டாமிடம், விஜய் மூன்றாமிடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவு
யூத் பிரிவில், ஸ்மிருதி முதலிடம், ஹாசினி இரண்டாமிடம், சவுபர்னிகா மூன்றாமிடம்; எலைட் பிரிவில், திலோத்தமா முதலிடம் பிடித்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி., ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு சைக்கிளிங் சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் விக்னேஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.