மயிலாப்பூர்: மயிலாப்பூர், மீனம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் முகேஷ், 11. இவர், சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆறாம் வகுப்பு மாணவர்.
நேற்று முன்தினம், வீட்டின் மாடியில் காற்றாடி விட்ட முகேஷ், கால் இடறி 15 அடி உயரத்தில் இருந்து விழுந்தார். இதில், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, தாடை கிழிந்தது.
முகேஷை அங்குள்ள தனியார் மருத்துவமனையில், பெற்றோர் சேர்த்தனர். அவருக்கு, தாடையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. சிகிச்சை பெற்ற முகேஷ், வீடு திரும்பினார்.