கோவை:கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை சுகாதார துறை அதிகரித்துள்ளது.
கோவையில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரண்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம், 20 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 88 ஆனது.மாநில அளவில் கொரோனா பாதிப்பில், கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்த, பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாவட்ட சுகாதாரத்துறையினர் அதிகரித்துள்ளனர். தினமும், 100 பேருக்கு பரிசோதனை நடந்த நிலையில், தற்போது, எண்ணிக்கை, 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், செலுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.