முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்த்தில் விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.பறவை இனங்களில் மிகச் சிறியதாகவும்,
அனைவரையும்கவரும் வகையில் 'கீச் கீச்'எனக் கூக்குரலிடும் பறவைசிட்டுக்குருவி. இவை பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும்.
ஆனால் தற்போது பெருகிவிட்டநகரமயமாக்கலாலும், வயல்வெளிகள் வீட்டு மனைகளாக்க பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.
முன்பு வீடுகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டுக்கும், சுவருக்கும் இடையேகாற்றோட்டத் திற்காக இடைவெளிகள் விடப்பட்டன. அங்குகுருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. தற்போதைய கான்கீரிட் கட்டடங்கள் குருவிகள் வாழவழியில்லாமல் செய்து விட்டன.
அதே போல நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள் சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும். அதிலுள்ளதுளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் 'பேக்'செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.
அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் சூழ்நிலை உருவாகிஉள்ளது. சிட்டுக் குருவி உள்பட அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பதற்குஅனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.