போத்தனூர்:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பா.ஜ.. சார்பில், சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று சுந்தராபுரத்தில் மாவட்ட மகளிரணி தலைவர் அருணாதேவி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர், டாக்டர், நர்ஸ், சமூக சேவையாளர், தொழில்முனைவோர், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று பரிசு பெற்ற என்.சி.சி.மாணவி, தேசிய தடகளத்தில் பரிசு வென்றோர் என, 25 பேருக்கு இவ்விருதினை, கவுமார பிராந்தினி நிறுவனர் தீபா வழங்கினார்.
தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், மாநில மகளிரணி பொது செயலாளர் மோகனபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுந்தராபுரம் மண்டல் மகளிரணி பொது செயலாளர் மினி பிரியா மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.