ராமாபுரம்: சென்னை, ராமாபுரம் அவ்வை தெருவில் உள்ள ஒரு வீட்டில், மூன்று மர்ம நபர்கள் புகுந்து பித்தளை குடம் மற்றும் 'காப்பர்' கம்பிகளை திருட முயன்றனர்.
அப்போது, அங்கிருந்தோர் அவர்களைப் பிடித்து, ராமாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள், ராமாபுரம் பூத்தப்பேடு பிரதான சாலையைச் சேர்ந்த தியாகராஜன், 22, தண்டலம் கோவூரைச் சேர்ந்த பிரகாஷ், 22, மற்றும் வளசரவாக்கம் திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்த நரேஷ், 19, எனத் தெரிந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் தியாகராஜன் மற்றும் பிரகாஷ் ஆகியோர், 'பிளம்பராக' வேலை செய்து வருகின்றனர்.
மேலும், தியாகராஜன் மீது குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.