கோவை:சிங்காநல்லூர் போலீசார், வெள்ளலூர் ரோடு பாலத்தின் அடியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த, 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.
சிங்காநல்லூர் லட்சுமணன் நகரை சேர்ந்த சூர்யா, 29, ஒண்டிப்புதூரை சேர்ந்த ஸ்ரீராகவேந்தர், 25, ஆகிய அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
* மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ராமநாதபுரம் சிக்னல் அருகே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆட்டோவில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.போலீசார், ஆட்டோ டிரைவர் சித்தனாபுரத்தை சேர்ந்த நிர்மல்குமாரை, 25, கைது செய்தனர். 100 கிராம் கஞ்சா, ஆட்டோ, ரூ.2 ஆயிரம் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
* சரவணம்பட்டி போலீசார், உடையம்பாளையம் திருமலை நகரில் கஞ்சா விற்ற சின்னவேடம்பட்டி சபரி நகரை சேர்ந்த சிவபிரசாத், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.