கோவை:மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்கள் செலுத்த ஏதுவாக, நேற்று நடந்த சிறப்பு முகாமில், 1.12 கோடி ரூபாய் வரி வசூலானது.
நடப்பு நிதியாண்டு, 2022-23ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி, காலியிட வரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்த வரும், 31ம் தேதிஇறுதி நாள்.
பொது மக்கள் இந்த வரியினங்கள் செலுத்த வசதியாக, சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
நேற்று, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமில், மத்திய மண்டலத்தில், 37 லட்சத்து, 71 ஆயிரத்து, 612 ரூபாய், கிழக்கில், 20 லட்சத்து, 31 ஆயிரத்து, 275 ரூபாய், வடக்கில், 22 லட்சத்து, 64 ஆயிரத்து, 600 ரூபாய், தெற்கில், 13 லட்சத்து, 63 ஆயிரத்து, 703 ரூபாய், மேற்கில், 17 லட்சத்து, 81 ஆயிரத்து, 791 ரூபாய் என, ஒரு கோடியே, 12 லட்சத்து, 18 ஆயிரத்து, 613 ரூபாய் வசூலானதாக, மாநகராட்சி வருவாய் பிரிவினர் தெரிவித்தனர்.