கோவை:மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும், இப்பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலினிடம் கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்(ம.தி.மு.க.,) கிருஷ்ணசாமி, கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
பத்திரப்பதிவு, கட்டட அனுமதி பெறுவது உள்ளிட்ட தேவைகளுக்காக, அரசுத் துறைகள் செல்லும் போது, 'பார்ட்டி பண்டு' எனப்படும் கட்சி நிதி வாங்க, தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 'யாரோ கட்சி நிதி வாங்க, நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்' என்ற மனநிலைக்கு அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் கடந்தாண்டு மார்ச் 31க்கு முன்பு சொத்து வரியானது, வீடுகளுக்கு சதுரடிக்கு, 65 பைசா முதல், 1.60 பைசா வரைதான் விதிக்கப்பட்டது. தற்போது, 3.50 முதல் 4.90 ரூபாய் வரை விதிக்கப்படுகிறது. கடைகளுக்கு சதுரடிக்கு தற்போது, 12.35 முதல், 14 ரூபாய் வரை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு கோவை மாநகராட்சியில், 300 முதல், 400 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக குப்பைக்கும் வரி போடப்பட்டுள்ளது.
புதிதாக போடப்படும் வரி என்பது, 2021ம் ஆண்டு வரியை விட, 100 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து, மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
கோவை மாவட்டத்தில், வரலாறு காணாத அளவில் கனிமவள கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. தினமும் கனிம வளங்கள் லாரிகளில், கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கோவையில், தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக ஏராளமான டாஸ்மாக் மதுக்கடைகள் உருவாகி உள்ளன. அனுமதி இல்லாமல் பல நுாறு பார்கள் செயல்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியர் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதற்கு முடிவு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.