கோவை:மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி எல்.ஜி.பி., நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. பணிகளை துவக்கிவைத்த மேயர் கல்பனா, தாமதமின்றி பணிகளை முடித்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்து வரும் குழாய் பதிப்பு பணிகளை வேகப்படுத்தி, போக்குவரத்து இடையூறு பிரச்னைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தினார்.