நெருப்பெரிச்சல் பகுதி மண்டல, பா.ஜ., சார்பில், கட்சி கொடியேற்று விழா போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் நடந்தது. மண்டல தலைவர் சுரேஷ்குமார், தலைமை வகித்தார். பொது செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாலு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார்.
துணைத் தலைவர் கார்த்தி, மண்டல செயலாளர்கள் வெங்கடேஷ், சரவணன், மருதமுத்து, முத்து, கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.