வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக போலீஸ்துறையின் கடும் நடவடிக்கையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது,'' என ஸ்ரீவில்லிபுத்துாரில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ம் அணி அலுவலகத்தில் நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை மதுரை கமாண்டண்ட் பாஸ்கர், விருதுநகர் எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், டி.எஸ்.பி.,க்கள் சபரிநாதன் (ஸ்ரீவில்லிபுத்தூர்) , பிரீத்தா (ராஜபாளையம்) , அலுவலர்கள் வரவேற்றனர். அங்கு மரக்கன்று நட்டு, பயிற்சி போலீசார், போலீசார் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.
![]()
|
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக போலீசின் கடும் நடவடிக்கையால் தற்போது பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது. எனினும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போதுதான் காலப்போக்கில் போக்சோ குற்றங்கள் முழு அளவில் குறையும் ,'' என்றார்.