வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அவனியாபுரம் : ''கூட்டணி குறித்து பா.ஜ., மத்திய குழு தான் முடிவு செய்யும்,'' என, மதுரை விமான நிலையத்தில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: பா.ஜ.,வில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளையும் மாநில தலைவரோ, மற்ற நிர்வாகிகளோ அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யலாம்.
அத்தைக்கு மீசை...
இது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும், அதற்கு முந்தைய காலங்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. மாநில கூட்டத்தில் கூறப்படும் கருத்துகளை, மத்திய குழு விவாதித்து முடிவு செய்யும். அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா. அதுவரை அத்தை அத்தை தான்.
இருந்தபோதிலும், நாங்கள் மையக் குழுவில் எங்களது கருத்துகளை சொல்வோம். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.
சமீபத்தில், டில்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்த போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரிடம் பேசினேன். அவர்களுக்கு எங்களுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி குறித்து அ.தி.மு.க.,வில் சில தலைவர்கள் கருத்து கூறி இருக்கலாம். அதற்கு பதிலளிக்க முடியாது.
![]()
|
தி.மு.க.,வில், அமைச்சர்கள் செயல்படும் விதம், தொண்டர்களை கல்லை கொண்டு அடிப்பது, தலையில் அடிப்பது என்பது போன்ற ஆபத்தான நிலை உள்ளது.
திருச்சியில், அக்கட்சியின் மூத்த நிர்வாகி சிவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்பு சமாதானம் என்றாலும் தற்காலிகமானதாகவே தெரிகிறது. தி.மு.க., உடைந்த பானை. இனி ஒட்டாது. தி.மு.க., தமிழகத்தில் ஒரு கட்சியாக இருக்காது. தி.மு.க.,வின் டி.என்.ஏ., மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.