பள்ளிக் கல்விக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி: தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு
பள்ளிக் கல்விக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி: தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

பள்ளிக் கல்விக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி: தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

Updated : மார் 20, 2023 | Added : மார் 20, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார். இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:* மொழிப்போர் தியாகி
Rs 40,299 crore for school education, Rs 18,661 crore for medical sector: allocation in Tamil Nadu budget  பள்ளிக் கல்விக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி: தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார். இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.




பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:


* மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்


* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்


* அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்


* சங்கமம் கலைவிழா, மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்.


* மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும்.


* தமிழ் மொழியில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.


* சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.



வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி


* தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்.


* இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் கட்ட ரூ.233 கோடி ஒதுக்கீடு.


* தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்தில் இருந்து, ரூ.40 லட்சமாக உயர்த்தபடும்.


* தமிழ் வளர்ச்சித்துறைக்கு கூடுதலாக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு.


* 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.


* கிண்டியில் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுவரும் மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.


* வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு 147 கோடியில் புதிய கட்டடம் திறக்கப்படும்.


* புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு


* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்.



ஜூனில் கருணாநிதி நூலகம்


* மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு


* குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.


* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு ரூ.7500 வழங்கப்படும்.


* அரசு பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.


* சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும்.


* உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு


* மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.


* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு.



latest tamil news


தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம்


* அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.


* நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு


* தொழிற்பள்ளி நிலையங்கள் ரூ.2,877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.


* சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.


* ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.


* உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு


* மதுரை, கோவை, திருச்சி, நீலகரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.


* தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.



காலை உணவு திட்டம்

* முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.


* முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; இதன் மூலம் லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.


* பாதாள சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தப்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


* ரூ.110 கோடியில் 4, 5ம் வகுப்புக்கும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் விரிவாக்கம்.


* 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.


* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலனுக்காக ரூ.1,580 கோடி ஒதுக்கீடு.


* மாற்றுத்திறனாளிகள் நலன் ரூ.1,444 கோடி ஒதுக்கீடு.


* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202322:24:27 IST Report Abuse
g.s,rajan அப்போ இனி தமிழகத்தில் அரசியல்வாதிங்க எல்லாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கலாம் , அப்படித்தானே முதல்வரே ....
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
20-மார்-202312:08:45 IST Report Abuse
Hari சுகாதாரத்துறை, கல்வித்துறை இரண்டும் சரியாக மக்களுக்கு பயன்படவில்லை அதுக்கு அரசு சாராயம் வித்து சம்பளம் கொடுப்பது அவசியமா, தி மு க பதவிக்கு வர கள்ள ஒட்டு போட இவர்கள் ஒத்துழைப்பதால் சமசீர் கல்வி என தமிழனை தமிழ் படிக்கவிடாமல் விரட்டி விட்டு இப்போது தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பணத்தை வீணாக ஒதுக்குவது அறிவின்மையை காட்டுகிறது.
Rate this:
Cancel
S.ANNADURAI - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-202311:43:33 IST Report Abuse
S.ANNADURAI சோனமுத்தா இந்தத்தரவையும் இல்லையா எப்பயா தருவிங்க அந்த மாதம் ஆயிரம் ரூவாவே.....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X