சென்னை: தமிழக பட்ஜெட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9000 கோடியும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* பொது விநியோக திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடு
* நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்கு குழுவுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* முதல்கட்டமாக மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு
விவசாய கடன், நகைக்கடன்
* ரூ.79 கோடியில் 217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும்.
* தெரு நாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
* விவசாயக கடன் தள்ளுபடிக்கு ரூ. 2,393 கோடி ஒதுக்கீடு
* நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு
* வனம், சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கீடு
சாலைகள்
* கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும், சிறப்பு நிவாரணம் போன்ற பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு.
* கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.
* 26 தொழில்நுட்ப கல்லூரிகள், 55 கலை கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்காக 5,145 கி.மீ சாலைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு ரூ.7,145 கோடியில் செயல்படுத்தப்படும்.
திறந்தவெளி திரையரங்கம்
* கோவையில் செம்மொழிப் பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும்.
* புதிரை வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடியில் அளிக்கப்படும்.
* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
* சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம், நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டுவர ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு ரூ.22,562 கோடி ஒதுக்கீடு.
* சென்னை கூவம், அடையாறு நீர்வழித்தடங்களில் ரூ.1,500 கோடியில் மறுசீரமைப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.
பேருந்து
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19465 கோடி ஒதுக்கீடு
* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
* சென்னையில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்த ரூ.1,600 கோடி ஒதுக்கீடு
* வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பணிமனைகள் மேம்படுத்தப்படும்.
* 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
மெட்ரோ ரயில்
* கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.