சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் மகளிர் உரிமைத்தொகை, கல்வி, மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயம், நகை, மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றின் கடன் தள்ளுபடி, சாலை கட்டமைப்பு போன்றவைகள் குறித்து பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
* 'மகளிருக்கான உரிமைத்தொகை' மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.,15ல் துவக்கம்
* 'மகளிருக்கான உரிமைத்தொகை' திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு
* கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* தமிழ் மொழியில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.
அருங்காட்சியகம்
* சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் கட்ட ரூ.233 கோடி ஒதுக்கீடு.
* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்.
* மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு
* அரசு பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
* முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

கடன் தள்ளுபடி
* பொது விநியோக திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
* மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.
* விவசாயக கடன் தள்ளுபடிக்கு ரூ. 2,393 கோடி ஒதுக்கீடு
* நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு
* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு ரூ.7,145 கோடியில் செயல்படுத்தப்படும்.
* கோவையில் செம்மொழிப் பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும்.
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு ரூ.22,562 கோடி ஒதுக்கீடு.

* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
* 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
* தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.8,056 கோடி ஒதுக்கீடு
* 7 மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வை-பை சேவை
* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட 4 நகரங்களில் ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
* சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும்.
* வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.
* ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.
* நிலம் வாங்குபவர்களின் பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
''கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி''
- என்னும் திருக்குறளை சொல்லி உரையை துவக்கினார். இதன் பொருள்: நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களை பேணிக்காப்பதே ஒரு அரசுக்கு புகழ் சேர்ப்பதாகும்.
அதேபோல், தனது உரையின் முடிவில், சிலப்பதிகாரத்தில் உள்ள மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவை பகுதியில் இடம்பெற்ற,
''கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்..''
- என்ற வரிகளை சொல்லி முடித்தார்.