வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த, பாதிரியார் பெனடிக் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று (மார்ச் 20) கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. கேரளாவை தலைமையகமாக கொண்ட மலரங்கரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் பாதிரியாராக பேச்சிப்பாறை, அழகியமண்டபம் பகுதி சர்ச்களில் பணியாற்றியுள்ளார். இங்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி நிர்வணப்படம் எடுத்து அதை லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக நியாயம் கேட்க சென்ற சிலர் அவரை தாக்கி லேப்டாப்பை பறித்து சென்றனர். பாதிரியாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனியார் சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோவை கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் பாதிரியார் பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படங்கள் வெளியாகின. இதையடுத்து பாதிரியார் தலைமைறைவானார்.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகே பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த, பாதிரியார் பெனடிக் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று (மார்ச் 20) கைது செய்யப்பட்டார். பாதிரியார் கொல்லம் நீதிமன்றத்தில் சரணடைய வந்த நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.