வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் உள்ள பாட்னா ரயில் நிலைய டிவியில், 3 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஒளிப்பரப்பாகியது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பீஹாரில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளின் வசதிக்காக டிவிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிவிகளில் விளம்பரங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ரயில் நிலையத்தில் உள்ள 10-வது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள டிவிகளில் மூன்று நிமிடங்கள் ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனால் ரயிலுக்கு காத்திருந்த பெண் பயணிகள் அலறியடித்துக் கொண்டு, ரயில் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகளின் புகார் படி, ரயில்வே போலீசார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர். சம்மந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தம் ரத்து செய்ப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாட்னா ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.