மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இ.மெயில் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்,56 மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் கேலக்ஸி அவென்யூ என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் மாதம் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் வாயிலாக துப்பாக்கி உரிமம் பெற்றார்.
![]()
|
இந்நிலையில் சல்மான் கானின் இ.மெயிலுக்கு வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.