வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஆன்லைனில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
![]()
|
இந்நிலையில் அமேசான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.