அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை, பழங்காநத்தத்தில், அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், 'பழனிசாமி முதல்வராக இருந்த போது, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இன்று அவர் மீதே, காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
'நேற்று வரை காவல் துறையினர், எங்கள் மீது அன்பாக இருந்தனர். இன்று உங்கள் மீது அன்பாக உள்ளனர். நாங்கள் பார்க்காத சல்யூட்டா... பத்தாண்டு காலம் ரயிலில் ஏறினா சல்யூட், இறங்கினா சல்யூட், வீட்டுக்கு போனா சல்யூட், வந்தா சல்யூட்னு பார்த்துட்டோம். இன்று, காவல் துறை உங்கள் நண்பன் என்றால், நாளைக்கு எங்கள் நண்பன்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'மொத்தத்துல இவங்க ரெண்டு கழக ஆட்சியிலயும் காவல் துறையை, 'சல்யூட்' அடிக்க தான் பயன்படுத்தி இருக்காங்க... அவங்கள எப்பத்தான் வேலை செய்ய விடுவாங்களோ...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.