மார்ச் 21, 1923
கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சியில், நாச்சிமுத்து கவுண்டர் - ருக்மணி தம்பதிக்கு மகனாக, 1923ல், இதே நாளில் பிறந்தவர் மகாலிங்கம்.
இவரின் தந்தை, ஏ.பி.டி., என்ற, பஸ் நிறுவனத்தை நடத்தியதுடன், நகராட்சி தலைவராகவும் இருந்தார். காந்தியால் ஈர்க்கப்பட்ட மகாலிங்கம், அரசியலில்ஆர்வம் கொண்டார். பி.இ., படித்த பின், 1952ல், பொள்ளாச்சியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வானார்; அதை மூன்று முறை தக்க வைத்தார்.
பதவிக் காலத்தில், தன் தொகுதிக்கு பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அதன்பின், அரசியலில் இருந்து விலகி, சக்தி குழுமம், சர்க்கரை ஆலை, நிதி, வாகன, ஜவுளி, பால் உற்பத்தி துறைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டார். ஆன்மிகவாதியான இவர், 'கிசான் வேல்டு, ஓம் சக்தி' இதழ்களையும்நடத்தினார். இவர், 2014ல் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ல், தன், 91வது வயதில் காலமானார்.
தமிழகத்தில் தொழில், பக்தியை வளர்த்த, 'அருட்செல்வர்' பிறந்த தினம் இன்று!