வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் - இலங்கை இடையே கடல் வழியாக பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், இது ராமர் பாலம் என்றும் ஹிந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. ராமாயண காலத்தில் இலங்கைக்கு செல்வதற்காக, ராமர் இந்தப் பாலத்தை கடலில் அமைத்ததாக கூறப்படுகிறது.
![]()
|
இந்த பாலத்தை பாரம்பரிய தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, ராஜ்யசபா முன்னாள் எம்.பி., சுப்பிரமணியன் சாமி சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, இது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், இது குறித்து சுப்பிரமணியன் சாமி முறையிட்டார். அப்போது அவர், ''ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்த விஷயத்தில், மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை,'' என்றார். இதையடுத்து, 'இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுகிறோம்' என,நீதிபதிகள் தெரிவித்தனர்.