காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சுகாதாரமான மக்களுக்கு சுகாதாரமான காடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள். காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று.
மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகைகள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், பானம், மழை, குளுமை, துாய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மக்களுக்கு பல வழிகளும் நன்மையை தருகிறது.
காடுகள் என்பது வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று. மரங்களும், காடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால், நாம் சுவாசிக்க முடிகிறது. தவிர சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்பவெட்ப நிலை சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
நாம் அனைவரும் வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரித்தால் வனங்களை பாதுகாக்கலாம்.