வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும், அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்' திட்டம், ௨௦௧௫ல் அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஜன., ௯ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மார்ச் ௧௫ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நிலுவைத் தொகையை நான்கு தவணைகளில் வழங்குவதாக ராணுவ அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதை எதிர்த்து, முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராணுவ அமைச்சகத்தின் அறிவிப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, ராணுவ அமைச்சகம் கட்டுப்பட வேண்டும்.
ஆறு லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் வீர தீர விருது பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை, அடுத்த மாதம் 30க்குள் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஐந்து லட்சம் பேருக்கான தொகையை, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில், ஜூன் 30க்குள் வழங்க வேண்டும்.
![]()
|
மீதமுள்ள, 10 - 11 லட்சம் பேருக்கான நிலுவைத் தொகையான 28 ஆயிரம் கோடி ரூபாயை, மூன்று தவணைகளில் அடுத்தாண்டு பிப்., 28க்குள் வழங்க வேண்டும். ஒட்டு மொத்தமாக அனைத்து நிலுவை தொகையையும் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்.
நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான விபரத்தை, சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. இதுபோன்ற கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement