வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
![]()
|
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மதுபான தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில் 2021 - 22ம் ஆண்டு புதிய கொள்கை வகுக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு புதுடில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது.
இந்த விவகாரத்தில், 'சவுத் குரூப்' என்ற குழுவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அரசியல் மற்றும் பண பலம் பெற்ற இக்குழுவினர், ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சவுத் குரூப்பில், தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதா இடம் பெற்றுள்ளார். இவர், தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, புதுடில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், கடந்த 11ம் தேதி கவிதா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடந்தது.
கவிதாவை மீண்டும் மார்ச் 16ல் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கவிதா தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கவிதா கோரினார்.
![]()
|
அதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, மார்ச் 20ல் ஆஜராக சம்மன் அளித்தது.
இதையடுத்து, மத்திய டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இரண்டாவது முறையாக நேற்று கவிதா ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement