வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்-''கிறிஸ்துவர்களையும், இதர சிறுபான்மையினரையும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர்,'' என, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.
![]()
|
கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தின் பேராயர் ஜோசப் பாம்பிளானி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, 'ரப்பர் கொள்முதல் விலையை கிலோ 300 ரூபாய் என மத்திய அரசு உயர்த்தினால், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கேரளாவில் வெற்றி பெற உதவுவோம்' என்றார்.
பேராயரின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ''நான் கத்தோலிக்க தேவாலயம் சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை; கஷ்டப்படும் விவசாயிகள் சார்பாகவே அப்படி பேசினேன்.
''மத்தியில், பா.ஜ., ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்,'' என ஜோசப் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ''பேராயர் ஜோசபின் பரிந்துரையை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்,'' என, கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் உறுதி அளித்தார்.
இது பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் நேற்று கூறியதாவது:
பேராயர் ஜோசபின் கருத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன? கிறிஸ்துவர்களுக்கு பா.ஜ., தீண்டத்தகாத கட்சி அல்ல என்பது, அவரது பேச்சு வாயிலாக நிரூபணமாகி உள்ளது.
![]()
|
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், கிறிஸ்துவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரை தங்கள் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன.
அவர்கள், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்த இரு கட்சிகளும் சிறுபான்மையினருக்கு ஆதரவானவை என கூறுவது கேலிக்கூத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement