வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நாடு முழுதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களிலும், 'ஆன்லைன்' வாயிலாக தகவல்களை அறிய வசதி செய்து தரும் இணையதளங்களை மூன்று மாதங்களுக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]()
|
தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ல் அமலுக்கு வந்தது. அரசின் அனைத்து துறைகள் குறித்தும் வேண்டிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள இந்த சட்டம் வழி செய்கிறது.
நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ விண்ணப்பிக்கப்படும் மனு மீதும், 'ஆன்லைன்' வாயிலாகவும் தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தில், தகவல் அறியும் உரிமைக்கான இணையதளம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில், தகவல் அளிக்கும் இணையதளம் துவங்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
![]()
|
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தகவல் அறியும் உரிமைக்கான இணையதளங்களை, மூன்று மாதங்களுக்குள் அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் செயல்படுவதால், தலைமை நீதிபதியிடம் இருந்து நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பெற்றுக் கொள்ளும்படி, உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement