வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களின் மேல் வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழக பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, கடலுார் மாவட்டத்தில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
![]()
|
சிதம்பரம், தொழுதுார், 8; வேப்பூர், 7; கல்லணை, ஹிந்துஸ்தான் பல்கலை, தொண்டி, 6; தேவகோட்டை, கோடியக்கரை, லெப்பைக் குடிகாடு, சீர்காழி, திருவாடானை, 5; சென்னை டி.ஜி.பி., அலுவலகம், 4; அரக்கோணம், செங்கல்பட்டு, திருக்காட்டுப்பள்ளி, 3; சென்னை நுங்கம்பாக்கம், 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில், சில இடங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.