நான்குநேரி : நான்குநேரி அருகே அரசு பஸ் கண்டக்டர், நெஞ்சு வலி காரணமாக இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் டிப்போவில் இருந்து நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டிற்கு அரசு பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது.
குமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த சுரேஷ் குமார், 47, கண்டக்டராக பணியாற்றி வந்தார். பஸ் நான்குநேரி வாகைகுளம் பைபாசில் வந்தபோது, பயணியருக்கு டிக்கெட் கொடுத்து கொண்டு இருந்த கண்டக்டர் சுரேஷ் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் பஸ்சில் மயங்கி விழுந்தார். உடனடியாக சுரேஷ் குமாரை நான்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். பயணியர் வேறு பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர்.