வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை நீலாங்கரையில் ரியல்எஸ்டேட் நிறுவன அதிபர் பாரிஸ் அபுபக்கர் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி ரெய்டு நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பண பதுக்கல் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ரெய்டு நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நார்த்தம் பட்டியை சேர்ந்தவர் ஆர்த்தி இவர் வேலூர் மாவட்டத்தில் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார் கடந்த 15ம் தேதி இவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 21) காலை நார்த்தம்பட்டியில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவரது வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.