அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி., துறையின் அனைத்து மாநில தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு எஸ்.சி., துறையின் தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன் குமார், மகாராஷ்டிரா மாநில எஸ்.சி., துறை தலைவர் சித்தார்த் உட்பட பல பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி ஒதுக்கீடு பட்டியலில் 50% இட ஒதுக்கீடு தலித் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி மகளிர் அணி மாணவரணி, சேவா தளம் அணி ஆகியவற்றுடன் எஸ்.சி., துறையும் இணைத்து, முன்னணி அமைப்பாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.