எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பார்லிமென்ட் 7வது நாளாக முடக்கம்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின.இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின.




latest tamil news


இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லி., இரு அவைகளும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 7வது நாளான இன்றும் (மார்ச் 21) அவை துவங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லி., இரு அவைகளும் இன்றும் முடங்கின. நாளை தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறையால், இரு அவைகளும் நாளை மறுநாள் (ஜன.,23) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன



latest tamil news



எதிர்க்கட்சிகள் போராட்டம்:


பார்லி., முதல் தளத்தில், அதானி விவகாரத்திற்கு பார்லி., தனிக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்த வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பிக்கள் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
22-மார்-202304:39:08 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana கான் காங்கிரஸ் மானம் கேட்ட வகையில் நடந்து கொள்கிறார்கள். சீனாவுடன் இந்த இத்தாலி குடும்பம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன/ இவர்கள் என்ன அதிகாரத்தில் இருக்கிறார்கள்? பி ஜே பி ஆட்சிக்கு முன் இவர்கள் தானே அதானியின் ஆரம்ப காலத்தில் உதவினார்கள்? அம்பானி அவர்கள் ஒரு முறை திருப்பி நீங்கள் என்ன தொழிலை செய்து இவளவு சொத்து சேர்த்தீர்கள் என்று அதன் பிறகு போலி காந்தி குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் அம்பர்னி அவர்களை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்கள். அதானி அவர்களும் திரும்பி ஒரு கேள்வி கேட்டல் போதும் வாயை மூடி கொள்வார்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202322:36:42 IST Report Abuse
g.s,rajan அதானி எப்படியும் தப்பிவிடுவார் ,பிரதமர் மோடி நிச்சயம் பலிகடா ஆக்கப்படுவார்,பாவம் ....
Rate this:
Cancel
R Sudarsan -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202319:58:37 IST Report Abuse
R Sudarsan All citizens should have direct access to President Supreme Court. Parliament needs to be dissolved. Amendment to constitution is necessary.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X