வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:2024ம் ஆண்டு நடக்க உள்ள பார்லி., தேர்தலில் பாஜ.,வை தோற்கடிக்க முடியாது என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வர இருக்கும் லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கை அடிப்படையில் பாஜ,, செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பாஜ.,வை முந்தினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுப்பட்டுள்ளன. இந்த சூழலில் தேர்தலில் பாஜ.,வை தேற்கடிக்க முடியாது. சமீபத்தில் காங்., எம்.பி ராகுல் பாதையாத்திரை மேற்கொண்டார். இதனால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமை இல்லை. பாஜவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.