தினசரி மேக்கப் செய்யறீங்களா? மேக்கப் போடாமல் வெளியில் போவதில்லையா? அப்படியானால் இது உங்களுக்குதான். தினசரி மேக்கப் போடுவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதுடன், சருமப் பிரச்னைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ளலாம்.
சருமை ஒவ்வாமைகள்
மேக்கப் போடுவதால் சருமத்தில் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படுகிறது. பெரும்பாலான நிறுவன தயாரிப்புகளில் ரசாயன பொருட்கள் அதிகம் கலந்துள்ளதால் எரிச்சல், அரிப்பு, தடிப்புகள் மற்றும் பல விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை பிரச்னைகள் அதிகம் ஏற்படும்.
கண்களில் தொற்று
![]()
|
மிகவும் கவனத்துடன் பயன்படுத்தவில்லை என்றால், மேக்கப் பொருட்கள் உங்கள் கண்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். கண்களுக்கு மேக்கப் போடும்போது, கண்களுக்குள் மேக்கப் பிரஷ் படாமல் பார்த்துக் கொள்ளவும். கண்ணின் முடி வரிசையில் பாக்டீரியா கிருமிகள் தொற்றிப் பெருகும் வாய்ப்பு அதிகம். ஆகவே, மஸ்காராவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் கவனமாக உபயோகப்படுத்தவும்.
சரும துளைகள் அடைப்பு
தினசரி மற்றும் நீண்டநேரம் தொடர்ந்து மேக்கப் போட்டிருக்கும் போது, அதிலுள்ள ரசாயனங்கள் உங்கள் சருமத் துளைகளை அடைத்து விடுகின்றன. இதனால் சருமம் சுவாசிக்க முடியாமல் போவதுடன், கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படும். மேலும் முகப்பரு, கட்டிகள் மற்றும் பிற சரும பிரச்னைகள் முகத்தில் ஏற்படலாம். கண்களை சுற்றி தடிப்புகள் அல்லது புடைப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
உலர் அல்லது எண்ணெய் சருமம்
![]()
|
உங்கள் சருமத்துக்கு பொருந்தாத மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால், உங்கள் சருமம் உலர்ந்து போகலாம் அல்லது சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கலாம். ஆகவே, ஒவ்வொருவரும் தங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற அழகுசாதனப் பொருட்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.
பருக்கள், சிறுகட்டிகள் மற்றும் கரும்புள்ளிகள்
ஹார்மோன்கள் சமநிலை பாதிப்பு, சிலவகை மருந்துகள் உட்கொள்ளுதல், மோசமான உணவு பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் முகப்பருக்கள் மற்றும் சிறுகட்டிகள் உண்டாகலாம். இத்துடன் தினசரி நீண்டநேரம் முகத்தில் மேக்கப்புடன் இருக்கும்போது இந்தப் பிரச்னை தீவிரமாகும். எனவே, முகப்பருக்களை தவிர்க்க மேக்கப் அளவாக இருக்க வேண்டும்.
தலைவலி
சில அழகு சதனப் பொருட்களால் தலைவலி, கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம் இவற்றில் பார்மால்டிஹைடை வெளிப்படுத்தும் டயாஸோலிடினைல் யூரியா போன்ற ரசாயனங்கள் இருப்பதே. தலைவலி அல்லது எரிச்சல் போன்ற பாதிப்புகள் உணர்ந்தால், சில நாட்களுக்கு மேக்கப் செய்வதை நிறுத்தி வையுங்கள்.